English
இவள் அந்தமான் பெண்மணி. கவிதை எழுதுவது பிடித்த விசயம் அன்பிற்கு அடங்குவேன் . ஆணவன் கண்டு அலட்டிக் கொள்ள மாட்டேன்.
White இளைப்பாறல் தேடி...!! இளைப்பாற வந்தமர்ந்த பறவைகளுக்கு இங்கிதம் இல்லை; தஞ்சம் தேடி வந்து அமர்ந்த கிளைகளை மட்டுமின்றி மரங்களையே ஆக்ரமிப்பு செய்து கொண்டன; அனுமதி ஏதுமின்றி! பறவைகளுக்கும் மனித குணம் பரவலாக உண்டு போலும்!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)
Andaman Tamizhachi (P.Uma Maheswari)
14 Love
White இளைப்பாறல் தேடி...!! இளைப்பாறல் வேண்டி இளமனம் ஏங்கும் இயலாமை காதல் இன்னும் என்ன செய்யத் துணியும்? மன மயங்கலில் மதியும் கொஞ்சம் மருகித்தான் போகும் மதில் மேல் பூனையென மனம் இங்கும் அங்கும் தாவிட முயலும்! மனம் கெட்டுப் போனதினால் மதியும் குட்டிச்சுவரேறித் தான் தாவும்! இடறி விழுந்த பின்னே மதியை மனம் சாடும்! காதல் பாடல் எல்லாம் சுருதியோடு சங்கீதம் ஆவது இசை மீட்டியவனின் வல்லமை யாகும்! ஸ்ருதி லயம் சேராத விரல் மீட்டினால் தந்தி அறுந்த வீணை போல் தானே ஆகும்!! இவள்.... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)
13 Love
White கொண்டவன் கொடியவன் அமைந்து போனாலும்.. சந்தர்ப்பம் அவளுக்கு சிறு சிறு சந்தோஷங்களை அதுவாகவே அமைந்து விடும்; அல்லது அமைத்துக் கொடுத்து விடும்! ஆனால்...உலகில் அவளை கொண்டு வந்தவர்கள் கொடியவரானால்.. சந்தோஷங்களும் சங்கடத்தில் தான் போய் முடியும்!! இவள்.. அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)
11 Love
White உனைத் தேடி வருகிறேன்! என் உயிர் நாடி நீ தானே!! மலை உச்சியில் நீயிருக்க படியேறிட முடியாது நான் தவிக்க 437 படிகளை தாண்டி உனை வேண்டி கரம் கூப்பி மலை இருங்கினேன் ஐய்யனே..எனதப்பனே.. இருந்த மூட்டு வலி கூட தெரியவில்லை!! நேற்று உச்சிப் பிள்ளையார் தரிசனம்!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)
12 Love
White பூக்களும் முட்களும்...!! முட்களுக்கும் காதலுண்டு பூக்களிடம் சமிக்ஞை புரிந்த காற்று.. சில்மிஷம் செய்ததில் முட்களுரசியது காயம் பட்ட பூக்களுக்கு என்றுமே முட்கள் மீது வெறுப்பு தான்! ஆசைப்பட்டவனின் கைகளில் உயிரறுத்து கொடுக்கும் பூ விற்கு உயிர் பிரித்தவன் மீது தான் ஒப்பற்ற காதல்! ஆசைக்கு அலங்காரம் செய்கிறது! கருவறுத்தவனை கண்டிக்காத பூ தற்காதவனை தண்டித்து மடிகிறது! முட்களின் காதல் என்றுமே ஒருதலைக் காதல் தான்!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)
White ஒரு பெறும் புயல் அடித்து சென்ற பூஞ்சோலையாய் தான் நானும் அங்கும் இங்குமாய் சிதறிய சருகளாய் உதிர்ந்தும் உதிராது வாடிய பூக்களைப் போல் மாறிப்போனது என் வாழ்க்கை பயணமும்!! இவள்.. அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari)
16 Love
You are not a Member of Nojoto with email
or already have account Login Here
Will restore all stories present before deactivation. It may take sometime to restore your stories.
Continue with Social Accounts
Download App
Stories | Poetry | Experiences | Opinion
कहानियाँ | कविताएँ | अनुभव | राय
Continue with
Download the Nojoto Appto write & record your stories!
Continue with Social Accounts
Facebook Googleor already have account Login Here