White பூக்களும் முட்களும்...!!
முட்களுக்கும் காதலுண்டு பூக்களிடம் சமிக்ஞை புரிந்த காற்று.. சில்மிஷம் செய்ததில் முட்களுரசியது காயம் பட்ட பூக்களுக்கு என்றுமே முட்கள் மீது வெறுப்பு தான்!
ஆசைப்பட்டவனின் கைகளில் உயிரறுத்து கொடுக்கும் பூ விற்கு உயிர் பிரித்தவன் மீது தான் ஒப்பற்ற காதல்! ஆசைக்கு அலங்காரம் செய்கிறது! கருவறுத்தவனை கண்டிக்காத பூ தற்காதவனை தண்டித்து மடிகிறது!
முட்களின் காதல் என்றுமே ஒருதலைக் காதல் தான்!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!
©Andaman Tamizhachi (P.Uma Maheswari)
#love_shayari