White
இளைப்பாறல் தேடி...!!
இளைப்பாறல் வேண்டி
இளமனம் ஏங்கும் இயலாமை
காதல் இன்னும் என்ன செய்யத் துணியும்?
மன மயங்கலில் மதியும் கொஞ்சம்
மருகித்தான் போகும்
மதில் மேல் பூனையென மனம்
இங்கும் அங்கும் தாவிட முயலும்!
மனம் கெட்டுப் போனதினால்
மதியும் குட்டிச்சுவரேறித் தான் தாவும்!
இடறி விழுந்த பின்னே
மதியை மனம் சாடும்!
காதல் பாடல் எல்லாம் சுருதியோடு
சங்கீதம் ஆவது இசை மீட்டியவனின்
வல்லமை யாகும்!
ஸ்ருதி லயம் சேராத விரல் மீட்டினால்
தந்தி அறுந்த வீணை போல் தானே ஆகும்!!
இவள்....
அந்தமான் தமிழச்சி!!
©Andaman Tamizhachi (P.Uma Maheswari)
#engineers_day