English
நான் ஒரு இணைய வானொலி அறிவிப்பாளர் மற்றும் கலைகளின் ரசனையோடு வாழ்க்கை வாழ விரும்புபவர்.
இளையவேணிகிருஷ்ணா
Tuesday, 24 December | 05:30 am
0 Bookings
White அந்த கண்ணாடி டம்ளரில் பொங்கி வழிந்து குதூகலித்து எனை சீண்டல் பார்வையில் பெரும் போதையூட்டி அழைக்கிறது வோட்கா! நானும் என்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள மிடறு மிடறாக பருகி அதனிடம் காதல் மொழிகளை பேசி சரிகிறேன்... என் மீது வழிந்தோடும் அந்த திரவமோ இது போல பல ஆயிரம் கதைகளை கேட்டும் சலிக்காமல் என் கன்னத்தில் ஒரு பெரும் முத்தத்தை கொடுத்து அதன் மடியில் உறங்க செய்து அந்த இரவை கண்ணீரில் நனைத்து எனக்காக பிரார்த்தனை செய்து என்னை அரவணைத்து விடியும் நேரத்தில் கொஞ்சம் கண்ணயர்ந்து துயில் கொள்கிறது! #இளையவேணிகிருஷ்ணா. நாள் 24/12/24. ©இளையவேணிகிருஷ்ணா
16 Love
தேடிக் கொண்டு இருக்கிறேன் நான் அந்த காலத்தில் மென்று தின்று சக்கையாக துப்பிய அந்த நாட்களை! இன்னும் ஒரு சிறு துளி மிச்சமாக அந்த சக்கையில் ருசி ஏதும் மிஞ்சி நான் சுவைப்பதற்காக காத்திருக்கிறதா என்று பெரும் ஏக்கத்தோடு! #இளையவேணிகிருஷ்ணா. நாள் 24/12/24/அந்தி மயங்கும் வேளையில். ©இளையவேணிகிருஷ்ணா
11 Love
White கொஞ்சமும் சோர்வில்லாமல் புத்துணர்ச்சியோடு ஓடிக் கொண்டே இருக்கும் என் சாயலில் பயணிக்கும் காலத்தை நான் கொஞ்சம் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்து சிலை போல நகராமல் அந்த நெடுஞ்சாலையின் நடுவில் நிற்கிறேன் ... என்னை கடந்து செல்லும் காலமெனும் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் ஏதேதோ எனை ஏசி விட்டு செல்கிறார்கள் என்று என்னிடம் கிசுகிசுத்து நகர்கிறது அந்த கால் இல்லாத காலம்... நானோ இரு கால்கள் இருந்தும் ஊனமாகி முடங்கி கிடக்கிறேன் அந்த சாலையில்... இங்கே நிஜமெது நிழலெது?? கொஞ்சம் புரிந்தவர்கள் சொல்லி விட்டு என்னை சாலையின் மறு பக்கத்தில் சேர்த்து விட்டு செல்லுங்கள்... #இளையவேணிகிருஷ்ணா. நாள் 22/12/24/ஞாயிற்றுக்கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா
13 Love
Unsplash எப்படியும் ஒரு நிகழ்வு நடந்த பிறகு இன்னொரு நிகழ்வு நடக்கத்தான் போகிறது அதை முன்பே அறிந்துக் கொள்ள ஏன் அவ்வளவு துடிக்கிறீர்கள்? அதை முன்பே அறிந்துக் கொண்டால் மட்டும் உங்களுக்கு சாதகமாக முடிந்து விடப் போகிறதா என்ன? அந்த நிகழ்வு உங்களுக்கு என்ன தர விரும்புகிறதோ அதை அது செவ்வனே நிகழ்த்தி விட்டு அது பாட்டுக்கு எந்தவித சலனமும் இல்லாமல் பயணித்து விடும்... நீங்கள் ஏன் வீண் சஞ்சலம் கொண்டு அதனோடு சண்டையிட பெரும் கோபங்கொண்டு அதை துரத்தி செல்கிறீர்கள்? அதை அப்படியே விட்டு விட்டு நீங்களும் சலனம் இல்லாமல் பயணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! அது தான் பேரமைதி வாழ்வின் யாத்திரை! #இளையவேணிகிருஷ்ணா. நாள் 18/12/24/புதன் கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா
You are not a Member of Nojoto with email
or already have account Login Here
Will restore all stories present before deactivation. It may take sometime to restore your stories.
Continue with Social Accounts
Download App
Stories | Poetry | Experiences | Opinion
कहानियाँ | कविताएँ | अनुभव | राय
Continue with
Download the Nojoto Appto write & record your stories!
Continue with Social Accounts
Facebook Googleor already have account Login Here