White அந்த ரசிக்கப்படாத எத்தனையோ இரவுகள் எல்லாம் | தமிழ் கவிதை

"White அந்த ரசிக்கப்படாத எத்தனையோ இரவுகள் எல்லாம் உயிர் வற்றிய நதி போல நிலவின் பிம்பத்தில் எனை ஏக்க பெரும் பார்வை பார்த்த நினைவுகள் இன்றும் என் நினைவில் குடிக் கொண்டு அலைகழிக்கிறது இதோ இப்போது மேகத்தில் மறைந்து கொண்ட அந்த நிலவோ அந்த இரவை மறந்து விடு இங்கே இருளின் நதியின் புலம்பலுக்கு நீ ஏன் ஒரு ஆறுதல் தோளாக இருக்கக் கூடாது என்று கேட்டது... நானும் சிறு முறுவலோடு நிலவின் பேச்சுக்கு எனது செவியை கொடுத்து அந்த இருள் தோய்ந்த நதிக்கு ஆறுதலாக பேசுகிறேன்... இரவோ என்னை தழுவிக் கொண்டு பேச்சற்று ஆனந்த கண்ணீரில் தோய்கிறது... இங்கே எனக்கான ஆறுதலும் அது தான் போலும் என்று மனதை தேற்றி பயணிக்கிறேன்... #இளையவேணிகிருஷ்ணா. நாள் 16/01/25/வியாழக்கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா"

 White அந்த ரசிக்கப்படாத எத்தனையோ 
இரவுகள் எல்லாம் 
உயிர் வற்றிய நதி போல 
நிலவின் பிம்பத்தில் எனை ஏக்க 
பெரும் பார்வை 
பார்த்த நினைவுகள் இன்றும் என் 
நினைவில் குடிக் கொண்டு 
அலைகழிக்கிறது 
இதோ இப்போது மேகத்தில் மறைந்து 
கொண்ட அந்த நிலவோ அந்த இரவை 
மறந்து விடு 
இங்கே இருளின் நதியின் புலம்பலுக்கு 
நீ ஏன் ஒரு ஆறுதல் தோளாக இருக்கக் கூடாது 
என்று கேட்டது...
நானும் சிறு முறுவலோடு நிலவின் பேச்சுக்கு 
எனது செவியை கொடுத்து 
அந்த இருள் தோய்ந்த நதிக்கு ஆறுதலாக 
பேசுகிறேன்...
இரவோ என்னை தழுவிக் கொண்டு 
பேச்சற்று ஆனந்த கண்ணீரில் தோய்கிறது...
இங்கே எனக்கான ஆறுதலும் 
அது தான் போலும் என்று 
மனதை தேற்றி பயணிக்கிறேன்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 16/01/25/வியாழக்கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா

White அந்த ரசிக்கப்படாத எத்தனையோ இரவுகள் எல்லாம் உயிர் வற்றிய நதி போல நிலவின் பிம்பத்தில் எனை ஏக்க பெரும் பார்வை பார்த்த நினைவுகள் இன்றும் என் நினைவில் குடிக் கொண்டு அலைகழிக்கிறது இதோ இப்போது மேகத்தில் மறைந்து கொண்ட அந்த நிலவோ அந்த இரவை மறந்து விடு இங்கே இருளின் நதியின் புலம்பலுக்கு நீ ஏன் ஒரு ஆறுதல் தோளாக இருக்கக் கூடாது என்று கேட்டது... நானும் சிறு முறுவலோடு நிலவின் பேச்சுக்கு எனது செவியை கொடுத்து அந்த இருள் தோய்ந்த நதிக்கு ஆறுதலாக பேசுகிறேன்... இரவோ என்னை தழுவிக் கொண்டு பேச்சற்று ஆனந்த கண்ணீரில் தோய்கிறது... இங்கே எனக்கான ஆறுதலும் அது தான் போலும் என்று மனதை தேற்றி பயணிக்கிறேன்... #இளையவேணிகிருஷ்ணா. நாள் 16/01/25/வியாழக்கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா

#sad_shayari

People who shared love close

More like this

Trending Topic