English
நான் ஒரு இணைய வானொலி அறிவிப்பாளர் மற்றும் கலைகளின் ரசனையோடு வாழ்க்கை வாழ விரும்புபவர்.
அந்த எத்தனையோ மாபெரும் சாதனையாளரின் உடலும் புகழ் மனிதனின் உடலும் தோற்றுக் கொண்டு தான் இருக்கிறது அந்த மயானத்தில் எரியும் தணலில்! இங்கே அந்த தணலோ எந்த மனிதனின் சாதனையையோ புகழையோ உரிமைக் கொண்டாடாமல் எந்தவித அகங்காரமும் இல்லாமல் அமைதியாக தின்று தீர்க்கிறது அந்த உடல் எனும் ரதத்தை... இங்கே மாயையின் சுவாசத்தின் வீரியத்தை யாரும் கொல்ல இயலாமல் இங்கும் அங்கும் அலைந்து திரிகிறது... நானோ இதை எல்லாம் வேடிக்கை பார்த்து பொழுதை போக்கும் சாதாரண மனுஷியாகின்றேன்! #இளையவேணிகிருஷ்ணா. நாள்23/02/25. அந்தி மாலைப் பொழுதில்... ©இளையவேணிகிருஷ்ணா
இளையவேணிகிருஷ்ணா
14 Love
White வலிகள் தான் பெரும்பாலான வாழ்க்கை பயணங்களை நிர்ணயிக்கின்றது! அந்த வலிகளையும் தாண்டி மௌனமாக நகர்கிறது... இங்கே வாழ்க்கை! எதுவும் புரிந்துக் கொள்ள முடியாத சூழலில் சில... எதையும் உணர முடியாத சூழலில் பல! இங்கே எதுவாயினும் எனை தாக்காத துயரென்று இங்கே ஏதும் இல்லை! வாழ்க்கை எனை மயான அமைதிக்கு மெல்ல மெல்ல எடுத்து செல்வதை மட்டும் உணர முடிகிறது... இங்கே அந்த மாயையின் பிடியில் இருந்து நழுவி போக வழி தேடி அலையும் சிறகொடிந்த பறவை நான்... #இளையவேணிகிருஷ்ணா. நாள்:23/02/25. அந்திமாலை நேரம்... ©இளையவேணிகிருஷ்ணா
13 Love
White அந்த எண்ணற்ற பயணங்கள் தான் எனை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது... என்னோடு பயணிப்பவர்கள் எத்தனையோ கதைகளை என்னோடு கதைத்து என் பயணத்தை சுவாரஸ்யமாக்குகிறார்கள்... நான் எத்தனையோ கதைகளை கேட்டு விட்டு இறங்கும் வழியில் அவர்கள் கதைகளை அந்த சாலையிலேயே விட்டு விட்டு சலனமின்றி பயணிப்பதை பார்த்து அந்த காலம் எனை இரக்கமின்றி பயணிப்பதாக கொஞ்சம் குறைப்பட்டுக் கொண்டது! நானோ இதில் என் தவறு ஏதுமில்லை! நான் எப்போதும் நான் தான்... என் உலகமும் வேறு தான்... அதுசரி அவர்கள் கதைகளுக்கு என்னிடம் ஏதும் தீர்வு தர சொல்லி இந்த பிரபஞ்சம் என்னிடம் உத்தரவிடவில்லையே என்றேன் அதுவும் சரிதான் என்று அந்த காலமும் மெல்லிய புன்னகையுடன் விடைப்பெற்றது நானும் தான்... #இளையவேணிகிருஷ்ணா. நாள் 16/02/25/ஞாயிற்றுக்கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா
16 Love
White பயணிகள் தனது பேருந்து வரும் வரை காத்திருக்கும் அந்த பயணியர் இருக்கையில் யாரும் இல்லாத அந்த நேரத்தில் சிறிது இளைப்பாறும் அந்த மரத்தின் ஒரு இலையை போல... நான் இந்த பிரபஞ்சத்தின் ஒரு ஓரத்தில் இளைப்பாறி அமர்ந்து இருக்கிறேன்... எனை அழைக்க உரிமையுள்ள கால தேவனோ இந்த பிரபஞ்சத்தின் எந்த திசையில் எனை தேடி அலைகிறாரோ நான் அறியேன்... அவர் வரும் வரை நான் இங்கே போவோர் வருவோரை ஒரு புன்னகை சிந்தி வேடிக்கை பார்த்து களிக்கிறேன் ... என் புன்னகையில் பரவசமடைந்த சிலர் சில இனிப்புகளை திணித்து செல்கின்றனர்... நானோ அதை அவசர கதியில் தின்று தீர்க்கிறேன் அந்த கால தேவன் வரும் முன்னே... #இரவு கவிதை. நாள்:25/01/25/சனிக்கிழமை. #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா
White அந்த ரசிக்கப்படாத எத்தனையோ இரவுகள் எல்லாம் உயிர் வற்றிய நதி போல நிலவின் பிம்பத்தில் எனை ஏக்க பெரும் பார்வை பார்த்த நினைவுகள் இன்றும் என் நினைவில் குடிக் கொண்டு அலைகழிக்கிறது இதோ இப்போது மேகத்தில் மறைந்து கொண்ட அந்த நிலவோ அந்த இரவை மறந்து விடு இங்கே இருளின் நதியின் புலம்பலுக்கு நீ ஏன் ஒரு ஆறுதல் தோளாக இருக்கக் கூடாது என்று கேட்டது... நானும் சிறு முறுவலோடு நிலவின் பேச்சுக்கு எனது செவியை கொடுத்து அந்த இருள் தோய்ந்த நதிக்கு ஆறுதலாக பேசுகிறேன்... இரவோ என்னை தழுவிக் கொண்டு பேச்சற்று ஆனந்த கண்ணீரில் தோய்கிறது... இங்கே எனக்கான ஆறுதலும் அது தான் போலும் என்று மனதை தேற்றி பயணிக்கிறேன்... #இளையவேணிகிருஷ்ணா. நாள் 16/01/25/வியாழக்கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா
12 Love
White ஒன்றும் இல்லாத ஆயிரம் ஆயிரம் விசயங்களுக்கு ஆயிரம் ஆயிரம் விமர்சனங்கள் அங்கே அவர்களால் வைக்கப்படுகிறது... இங்கே அதை பார்த்துக் கொண்டே நகைப்போடு மெல்ல நகர்கிறது காலம்... நானும் கூட காலத்தின் மெல்லிய விரல்களை பிடித்துக் கொண்டே அவர்களை வெறுமனே வேடிக்கை பார்த்து நகர்கிறேன் சிறு குழந்தையாக... காலமோ எனது வேடிக்கையை ரசித்துக் கொண்டே எனை அழைத்துச் செல்கிறது எந்த விசய சுகங்களிலும் எனை தொலைத்து விடாமல் கண்ணும் கருத்துமாக... #இளையவேணிகிருஷ்ணா. நாள் 15/01/25/புதன் கிழமை. அந்தி மயங்கும் வேளையில்.. ©இளையவேணிகிருஷ்ணா
15 Love
You are not a Member of Nojoto with email
or already have account Login Here
Will restore all stories present before deactivation. It may take sometime to restore your stories.
Continue with Social Accounts
Download App
Stories | Poetry | Experiences | Opinion
कहानियाँ | कविताएँ | अनुभव | राय
Continue with
Download the Nojoto Appto write & record your stories!
Continue with Social Accounts
Facebook Googleor already have account Login Here