சனாதானம்.
சனாதானம் என்பது சாதாரண சொல் கிடையாது,
சாதனைக்காக பேசும் சொல்லும் கிடையாது,
சந்தர்பவாதத்திற்க்காக பேசும் சொல்லும் கிடையாது,
அனைத்து உயிர்களையும் படைக்கும் தெய்வத்தால் உருவான சொல்,
அகிலஉலகத்தையும் காக்கும் சொல்,
அனைத்து உயிர்களுக்கும் பொதுவான புனித சொல்,
அனைத்து உயிர்களின் உணர்வுகளை மதிக்கும் சொல்,
உணர்ச்சிகளில் ஒன்றரக்கலந்த சொல்,
முதலும் முடிவும் இல்லாத சொல்,
இந்த சொல்லிற்கு பரம் பொருள் என்பதே உட்பொருளாகும்,
அதாவது சனாதானத்தை பரப்பிரம்மம் என்றே சொல்லலாம்,
அப்படிப்பட்ட சனாதானத்தை அழிப்பது என்பது அனைத்து உயிர்களையும் படைத்த இறைவனையே அழிக்க முயல்வதற்கு சமம்.
இரணியன் முயன்றான் அழிந்தான், பசுமாசுறன் கதியும் அதுவே என்று புராணம் சொல்கின்றது.
சனாதானம் என்பது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் உலகில் வாழ்வதற்கு வகுத்துக்கொடுத்த பொது வழி அதனை முறையாக புரிந்துகொண்டால் நன்று.
உயர்வு,தாழ்வுகளை மனிதர்களிடம் உண்டாக்கியது சக மனிதர்கள் என்பது நிச்சயம் புரியும்.
இறைவன் உருவாக்கிய சனாதானம் நம்மை காக்கும் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை
அன்று பிரகலாதனை இரணியனிடம் இருந்துக்காத்த இறைவன் இன்று நம்மையும் கண்டிப்பாக காத்து நாட்டில் தர்மத்தை நிலைநிறுத்துவர்.
P.Muthukumaran
INSTA ID: muthukumaranp1
©MUTHUKUMARAN P