அவளோடு
இருந்திருந்தால்...
அலுவலக நேரத்தில்
அலைபேசியில் மூழ்கி,
அவனைப்போலவே
அம்மிக்கல் வந்தமர்ந்து
அவளை பிக்கப் டிராப்
செய்து கொண்டு..
முன்னேற்றம் ஏதுமின்றி
வாழ்க்கை பின்னோக்கிச்
சென்றிருக்கும்.
இன்றுபோல் கவிஞனாய்,
எழுத்தாளனாய், பாடகனாய்,
பேச்சாளனாய், ஜோதிடனாய்,
சமூக சேவகனாய் நான்
பரிணமித்திருக்க முடியாமல்
கவனம் முழுவதும் அவள்
கால்களுக்கு இடையிலேயே
கவிழ்ந்து கிடந்திருக்கும்.
பிரிந்து சென்றதற்காய்
அவளுக்கு பெரும் நன்றி.
-ஸ்ரீதர்.ஐ.கே.
©I.K.Sridhar