காலம் மாறினால்...
காதலும் மாறுமோ...
என்ற கண்ணதாசன்
வரிகள் மீது எனக்கு
உடன்பாடில்லை.
அன்று....
பிரபல ஷாப்பிங் மால்
ஒன்றில் அவளருகில்
நான் நின்று தூரமாய்
நின்ற அவரை, புதிதாக
வந்தவர் அவர்தானென
காண்பித்தேன் நான்.
இன்று....
அவருடன் அருகமர்ந்து
அவளிணைந்து செல்வதை
தூரத்தில் நின்றுகொண்டு
பார்க்கின்றேன் நான்.
ஆம் காலம் மாறியதும்
காதலும் மாறி இருக்கிறதே..!
- ஸ்ரீதர்.ஐ.கே.
©I.K.Sridhar